சமூக வலைத் தளங்களிலும், இணையத்திலும் காய்ச்சி எடுக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. ஜெயகாந்தன் என்ற மிகப் பெரிய ஆளுமையின்
பெயரை மிக மட்டமான முறையில் தனது சுய தம்பட்டத்துக்குப் பயன்படுத்திக்
கொண்டார் என நாட்டின் பிரபலமான ஆங்கில நாளேடான தி இந்து சாடியிருக்கிறது.
எத்தனை விருதுகள், எவ்வளவு புகழ் மாலைகள், மேடைகள் கண்ட கவிஞருக்கு இது
தேவையா என்ற குரல்தான் ஏகோபித்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த
தர்மசங்கடத்துக்கு வேறு யாரும் காரணமல்ல. அவரது சுபாவம்தான்.
வைரமுத்துவின் வழக்கமான அரசியல்தான் இது!
'இன்று நீ நாளை நான்' என்ற படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்த சமயம்.
அந்த படத்தின் இயக்குனர் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன். தயாரிப்பாளர்
பழ.கருப்பையா. இருவரும் படத்தின் இசைய்மைப்பாளராக இளையராஜாவை முடிவு பண்ண
அவரை சந்திக்க சென்றிருக்கிறார்கள்.
இளையராஜாவும் அந்த படத்திற்கு ஒத்துக்கொள்ள, பாடல் கம்போசிங்கை வெளியில்
எங்காவது வைத்துக்கொள்ளலாம் என்று இளையராஜா சொல்ல, ஊட்டி, கொடைக்கானல்,
கேரளா என்று ஆளுக்கொரு இடமாக சொல்கிறார்கள். ஆனால் இளையராஜாவே தேனியில்
உள்ள வைகை அணைக்குச் செல்லலாம் என்று சொல்லவும் மூவருக்கும் ட்ரெயினில்
டிக்கெட் ரிசர்வ் செய்யப்படுகிறது. அந்த படத்திற்கான பாடல்களை யாரை வைத்து
எழுத வேண்டும் என்பதை இளையராஜா முடிவு செய்கிறார்.
இந்த தகவல் வைரமுத்துவின் காதுக்கு வருகிறது. பாட்டு எழுத வேண்டிய லிஸ்டில்
தன்னுடைய பெயர் இல்லையென்பதை தெரிந்து கொள்கிறார். எப்படியாவது அந்த
படத்தில் இடம் பிடிக்க தன்னுடைய அரசியலை அரங்கேற்ற தயார் ஆகிறார்
வைரமுத்து.
ஊருக்குப் புறப்படும் அந்த மூவரும் எந்த தேதியில் ஊருக்குப்போகிறார்கள்
என்று தெரிந்து வைத்துக்கொண்டு அதே ட்ரெயினில் தனக்கும் ஒரு டிக்கெட்டை
முன்பதிவு செய்து கொள்கிறார். இது இளையராஜா, மேஜர் சுந்தர்ராஜன்,
பழ.கருப்பையா மூவருக்கும் தெரியாது.
ரயில் புரப்படும் அதே நாளில் அந்த கோச்சிற்கு வெளியே மூவருக்கும்
காத்திருக்கிறார் வைரமுத்து. அதுவும் எப்படி எல்லோருக்கும் சாப்பிட டிபன்
கேரியரில் விதவிதமான உணவுகளுடன். அவரை அங்கு பார்த்த இளையராவிற்கு பெரிய
ஷாக். யார் இவரை வரச் சொன்னது என்பது போல பழ.கருப்பையா, மேஜர் சுந்தர்ராஜன்
இருவரையும் பார்க்கிறார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டர்களே தவிர பதில் சொல்லவில்லை.
அப்புறம் வேறு வழியில்லாமல் பழ.கருப்பையாவே 'வந்துட்டார், நம்ம கூடவே
வரட்டுமே' என்று சொல்ல அவர்களுடனே பயணித்திருக்கிறார் வைரமுத்து.
இளையராஜாவிற்கு இதில் ஒப்புதல் இல்லையென்றாலும் அதை வெளிக்காட்டிக்
கொள்ளவில்லை. வந்ததற்காக அவருக்கு இரண்டு டியூன்களை கொடுத்து எழுத
வைத்திருக்கிறார்.
ஒரு பிரபல வார இதழில் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தி ஒன்று. அப்போது
பாரதிராஜாவின் புதுமைப்பெண் வெளியாகி இருந்த சமயம். அந்த படத்தில்
வைரமுத்து எழுதிய பாடல் என்று ‘கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு'
என்ற பாடல் வெளிவந்திருந்தது. ஆனால் அந்த பாடலை எழுதியது வாணியம்பாடி அருகே
நாட்ராம் பள்ளி என்ற ஊரை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் என்ற
உண்மையை போட்டு உடைத்தது. அந்த மாணவன் வைரமுத்துவிடம் முன்னுரைக்காக
கொடுத்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது.
கவிஞர் அறிவுமதி அவர்களும் இதே போல் தன்னுடைய கவிதை தொகுப்பிலிருந்து
எடுக்கப்பட்டதாக வைரமுத்துவின் பல பிரபலமான திரைப் பாடல்களை குறிப்பிட்டு
‘பா நிரை கவர்தல்' என்ற தலைப்பில் கையடக்கப் பிரதி ஒன்ரை வெளியிட்டார்.
லேட்டஸ்டாக வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் புத்தக வெளியீட்டு விழாவில்
கலந்து கொண்டார் ஜெயகாந்தன். அப்போது அவர், 'ஓசோனில் ஓட்டை விழுந்தால்
உமக்கென்ன ஆயிற்று. அந்த ஓட்டையை வியாபாரமாக்குகிறாயா... படைப்புகள்
மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பயத்தை ஏற்படுத்தக்கூடாது"
என்று வைரமுத்துவை அதே மேடையிலேயே வைத்து கம்பீர குரலில் கண்டித்தார்.
இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய பாணியில் காய் நகர்த்துவது
வைரமுத்துவின் கவி அரசியல். ஆனால் இந்த முறை அந்த அரசியல் அம்பலத்திற்கு
வந்து விட்டது. எளிய மக்களின் உண்மை நிலையை தன் எழுத்துக்கள் மூலம்
உலகுக்கு உணர்த்திய மாபெரும் படைப்பாளி ஜேகே. அவர் மறைந்த பிறகும் அவரது
பெயரை யாரும் பொய்யாகக்கூட பயன்படுத்தக் கூடாது என்று இயற்கையே
வெகுண்டெழுந்தது போலத்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது!
Thursday, 23 April 2015
வைரமுத்துவிற்க்கு....
வைரமுத்து..... இந்த வார்த்தை என் இளமைக்கால இலக்கிய வாசலை திறந்து வைத்தது...எனக்கு தமிழ் மேல் தனி பற்று உண்டாக்கியது இவர் வரியை வாசித்தேன் என்பதை விட சுவாசித்தேன் என்பதே மிகச்சரி! நிற்க. ஆனால் உம்மை எனக்கு அறிமுகப்படுத்தியது என் ராஜ இசை..
விழியில் விழுந்து இதையம் நுழைந்து உயிரில் கலந்த உறவே.... இந்த பாடல் இசைகோர்ப்பு முடிந்ததும் என் இளையராஜா உம்மை கட்டித்தழுவி முத்தம் கொடுத்ததாக உங்கள் வார்த்தையில் இருந்து அறிந்தேன் நானும்தான்....
விழியில் விழுந்து இதையம் நுழைந்து உயிரில் கலந்த உறவே.... இந்த பாடல் இசைகோர்ப்பு முடிந்ததும் என் இளையராஜா உம்மை கட்டித்தழுவி முத்தம் கொடுத்ததாக உங்கள் வார்த்தையில் இருந்து அறிந்தேன் நானும்தான்....
என்று எங்கள் ராஜாவை எதிர்த்து எதிர் வரிசையில் இருந்து குரல் கொடுத்தீரோ ! அன்றிலிருந்து உங்கள் மீதிருந்த மிகப்பெரிய மரியாதையை குறைத்துக்கொண்டேன்.. உங்கள் எழுத்துக்களை எட்டி நின்றே பார்த்தேன், என் வீட்டு அலமாரி உங்கள் புத்தகங்களை வரவேற்க்க மறுத்து விட்டன..
உங்கள் கவிதை புத்தகத்தில் இளையராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் அகங்கார வார்த்தை ( என்னோடு இணைந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உனக்கும் இல்லை உன்னோடு இணைந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை எனக்கும் இல்லை) இப்போது நீங்கள் அடைந்துள்ள வெற்றி நீங்கள் ஏறி நிற்கும் உயரம் அத்தனையும் இளையராஜா என்ற ஒரு தனி மனிதனால் மட்டுமே என்ற உண்மை உங்களைத் தவிர உலகுக்கு தெரியும்..
உங்கள் கவிதை புத்தகத்தில் இளையராஜாவுக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் அகங்கார வார்த்தை ( என்னோடு இணைந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உனக்கும் இல்லை உன்னோடு இணைந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை எனக்கும் இல்லை) இப்போது நீங்கள் அடைந்துள்ள வெற்றி நீங்கள் ஏறி நிற்கும் உயரம் அத்தனையும் இளையராஜா என்ற ஒரு தனி மனிதனால் மட்டுமே என்ற உண்மை உங்களைத் தவிர உலகுக்கு தெரியும்..
ஆனால் தற்போது உங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள இந்த அவமான மேகம் விரைவில் விலக வேண்டுமென்றே என் மனம் விரும்புகிறது..
இப்படிக்கு - ஒரு காலத்தில் உங்கள் வரிகளின் வாசகன்....
இப்படிக்கு - ஒரு காலத்தில் உங்கள் வரிகளின் வாசகன்....
Wednesday, 15 April 2015
Trust (2010): ஆன்லைன் சாட்டிங் வக்கிர மிருகங்கள்.
Trust (2010) அமெரிக்காவில் இளம் டீன் ஏஜ் பெண்கள் எப்படி ஆன்லைன் பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட எதார்த்தத்தை
மீறாமல் சொல்லும் படம். ஆன்லைன் சாட்டிங் நம்மில் அனைவரும் செய்து
இருப்போம். முகம் தெரியாத நிறைய நபர்களை நாம் சந்திக்க ஒரு வாய்ப்பாய்
அமைக்கிறது ஆன்லைன் சாட்டிங். முகம் தெரியாமல்/முகத்தை மூடி செய்ய படும்
வாய்ஸ் சாட்டிங்கில் ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும், வயதான ஆள் தான்
டீன் ஏஜ் பையன் போலவும் நம்முடன் சாட் செய்ய நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
தவறான சாட் முலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுவதை,
பெண்கள் ஏமாற்ற படுவதை நியூஸ் பேப்பரில் படித்து இருப்போம். நமக்கு அது
வெறும் செய்தி தான், ஆனால் அந்த பெண் எந்த மாதிரியான மன உளைச்சலுக்கு
ஆளாக்க படுகிறாள், அவளது குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன
என்பதை, கண்டிப்பாய் முன்றாவது நபர்கள் ஆகிய நாம் உணர முடியாது. ஆன்லைன்
சாட்டின் விளைவாக ஒரு அமெரிக்க டீன் ஏஜ் பெண் எப்படி பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டு உடைந்து போகிறாள், எப்படி பட்ட மன
உளைச்சலுக்கு ஆளாகிறாள், அந்த மன உளைச்சலில் இருந்தது எப்படி மீள்கிறாள்
என்பதை அற்புதமாய் சொல்லும் படம் தான் Trust.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான அனே (Annie) 14 வயதை நெருங்கும்
அமெரிக்க டீன் ஏஜ் பெண். முதல் காட்சியில் அனே நெட்டில் சிலருடன் தனது
ஸ்கூல் வாலிபால் செலக்ஷன் பற்றி ஆன்லைன் குரூப் சாட் செய்வது போன்று படம்
ஆரம்பிக்கும், அந்த சாட்டில் தன்னுடன் தவறாக பேசும் நபரை அனே உடனே பிளாக்
செய்து விடுவாள். இதில் இருந்தது தவறாக பேசுபவர்களை கண்டு பிடிக்கும்
அளவுக்கு வளர்ந்த பெண் அனே என்பது நமக்கு புரியும். அந்த குரூப் சாட்டில்
சார்லி என்பவன் மட்டும் மிகவும் நல்லவன் போல் அனேவிற்கு வாலிபால்
விளையாட்டு பற்றி டிப்ஸ் தருவான். அனேவும் ஸ்கூல் வாலிபால் டீமில் விளையாட
செலக்ட் ஆகி விடுவாள். மறுநாள் சாட்டில் சார்லி அவளது செலக்ஷன் பற்றி
கேட்க, அனேவிற்கு சார்லி மீது நல்ல அபிப்பிராயம் வருகிறது. இருவரும்
சாட்டில் பேச ஆரம்பிக்கிறர்கள். சார்லி தனக்கு 15 வயது தான் ஆகிறது, தானும்
ஸ்கூல் வாலிபால் பிளேயர் என்று சொல்லுவான். இப்படியாக சார்லி மற்றும்
அனேவின் நட்பு சிறு புள்ளியில் ஆரம்பித்து வளர்கிறது.
இதற்கிடையே அனேவின் தந்தை வில் (Will) அவளது 14 ஆவது பிறந்த நாள்
அன்று Apple Mac புக் ஒன்றை பரிசாக தருவார். Mac புக் முலம் அனே
சார்லியுடனான தனது சாட்டிங்கை தொடர்கிறாள். அப்பொழுது சார்லி தான் 15 வயது
பையன் இல்லை, தனக்கு 20 வயது ஆகிறது என்று சொல்லுவான். அனேவும் அதை பெரிய
விஷயமாக எடுத்து கொள்ள மாட்டாள். சிறிது நாட்களில் இருவரும் டீப்
சாட்டிங்கில் இறங்கி விடுவார்கள். பிறகு சார்லி தனக்கு 20 வயது இல்லை, தான்
25 வயது வாலிபன் என்று ஒரு புகைபடத்தை அனுப்புவான். அனே அப்பொழுதும் அவனை
மன்னித்து விடுவாள்.
Trust: What Ever happens Life has to Go On.
இருவரது சாட்டிங் எந்த தடையும் இன்றி வளர்கிறது. ஒரு நாள் சார்லி நாம்
இருவரும் சந்தித்தால் என்ன என்று சொல்லி, அந்த சந்திப்புக்கு அனேவிடம்
சம்மதம் வாங்கி விடுவான். அந்த ஊரில் இருக்கும் ஒரு மாலில் இருவரும்
சந்திப்பது என்று முடிவு செய்கிறார்கள். அந்த மால்க்கு சென்று சார்லியை
பார்த்த பிறகு தான் அனேவிற்கு தெரிய வரும், சார்லி 25 வயது வாலிபன்
கிடையாது, 35 வயதை கடந்த நடுத்தர ஆள் என்பது. மால்லில் இருந்தது வெளியேற
அனே செய்யும் முயற்சி, சார்லியின் நயவஞ்சக பேச்சால் தடுத்து நிறுத்த
படுகிறது. மால்லில் இருந்தது அனேவை சார்லி ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து
சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான்.
அந்த சம்பவத்தினால் மனம் சோர்வடையும் அனே, அதை பற்றி தனது உயிர் தோழியான
பிரிட்டானியிடம் சொல்கிறாள். ஆனால் பிரிட்டானி அந்த சம்பவத்தை அவர்கள்
படிக்கும் ஸ்கூல் நிர்வாகத்திடம் சொல்லி விடுவாள். அங்கிருந்து லோக்கல்
போலீஸ், பிறகு FBI வரை விஷயம் சென்று விடும். அனே ஒரு வயதான நபரால் ஏமாற்றி
கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டு வில் (Will) உடைந்து
விடுவார். FBI விசாரணையில் சார்லி இது போல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது
தெரிய வரும். அதுவும் எந்த ஒரு தடயமும் விடாமல் தவறை சரியாக செய்பவன்
சார்லி என்பது தெரியவரும். IP அட்ரெஸ், கிரெடிட் கார்டு, போட்டோ என்று ஒரு
தடயம் கூட கிடைக்காது.
சாதாரண ஆக்சன் படமாக இருந்தால், பாதிக்க பட்ட பெண்ணின் அப்பா கதாபாத்திரம்
தன் பெண்ணை மோசம் செய்தவனை துரத்தி துரத்தி கொலை செய்வது போல் இருந்தது
இருக்கும். அது நடைமுறை சாத்தியம் இல்லாத செயல். அப்படி செய்து இருந்தால்
பத்தோடு பதினொன்று என்று இந்த படம் ஆகி இருக்கும்.
ஆனால் Trust படத்தில் அந்த மாதிரி எதுவும் செய்யாமல், பாலியல் ரீதியாக
துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவர்களது
குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள் பற்றி காட்டி இருப்பார் இயக்குனர் டேவிட்
சுவிம்மர் (David Schwimmer). தன் அன்பு மகள் யாரோ ஒருவனால் ஏமாற்ற
பட்டு விட்டாளே என்று அனேவின் தந்தை கதாபாத்திரமான வில் கதறும் காட்சிகள்
நம்மை நிறைய இடங்களில் உலுக்கி எடுத்து விடும். படம் நகர நகர நாமும்
அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகி விடுவோம். அந்த குடும்பத்துக்கு
எப்படியாது ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து விடுவார்
இயக்குனர். படத்தின் இறுதி காட்சியில் வில் மற்றும் அனே இடையே நடைபெறும்
உரையாடல்கள் உலக தரமானவை. யாரையும் பழி வாங்காமல், யாருக்கும் அப்படி இரு,
இப்படி இரு என்று அட்வைஸ் செய்யாமல் என்ன நடந்தாலும் Life has to Go On
என்ற தத்துவத்துடன் படம் முடியும்.
படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது சார்லி என்பவன் யார் என்று
காட்டப்படும். அந்த காட்சியை பற்றி ரொம்ப நேரம் நினைத்து கொண்டு இருந்தேன்.
எனக்கு தோன்றியது சார்லி என்பவன் சமுகத்தில் முலையில் யாருக்கும்
தெரியாமல் ஒளிந்து வாழும் மிருகம் கிடையாது, அவன் சமுகத்தின் உயர்ந்த
இடத்தில் கூட இருக்கலாம், எங்கும் இருக்காமல் எதிலும் இருக்காமல்,
யாராகவும் இருக்காமல்...
போன வருடம் இணையத்தில் ஒரு பிரச்சனை வெடித்தது, சாரு நிவேதிதா என்கிற
எழுத்தாளர்/பிளாக்கர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசி விட்டார் என்ற சர்ச்சை
வெடித்தது. அது உண்மையா என்று கூட எனக்கு தெரியாது. அனைவரும் சாரு
நிவேதிதாவை அவர் சாட்டில் பேசியதை விட மிகவும் ஆபாசமாக பேசினார்கள். அந்த
பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே.
எனக்கு இந்த படம் பார்த்த உடன் அந்த பெண்ணின் (அது பெண்ணே கிடையாது என்றும்
சில பேர் சொன்னார்கள்) மன நிலையை யோசித்து பார்த்தேன், ஒரு கனம் என்
உடம்பு நடுங்கி விட்டது. அது தான் Trust டின் தாக்கம்.
வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாய் பாருங்கள். முழு படத்தையும் youtube யில் காண இங்கு கிளிக் செய்யவும்.
Trust: What Ever happens Life has to Go On.
Monday, 12 January 2015
உங்களுக்காக சில ஆச்சரியங்கள்(பகுதி-5)..
* பழனிமலையின் இயற்பெயர் `திருஆவினன்குடி'.
* குஜராத்தில் 4 முறை முதல் அமைச்சராக இருந்தவர் மாதவ் சிங் சோலங்கி.
* உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.
* தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுவது போடிநாயக்கனூர்.
* யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது. * 6 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் காணப்படும் மேகங்கள் சைரஸ் எனப்படுகிறது.
* 2 ஆயிரத்து 100 மீட்டர் முதல் 6 ஆயிரம் மீட்டர் வரையான சராசரி உயரங்களில் காணப்படும் மேகங்களின் பெயர் அல்டோஸ்.
* 2 ஆயிரத்து 100 மீட்டர் வரையான தாழ்வான மேகங்கள் ஸ்டேரடஸ்.
* பார்வை தெரியக்கூடிய மூடுபனி மிஸ்ட் எனப்படும்.
* ஒரு கிலோமீட்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பார்வை தெரியக்கூடிய தூசுகளால் ஏற்படக்கூடிய புகை மூட்டம் ஹேஸ்.
உங்களுக்காக சில ஆச்சரியங்கள்(பகுதி-4)..
* யானை ஏறக்குறைய 30 வயதில் இனப்பெருக்க பருவத்தை எட்டுகிறது. இதன் கற்ப காலம் 22 மாதங்களாகும்.
* மனித குடலின் நீளம் - 8 மீட்டர்.
* அம்மை நோய்க்கு காரணம் - வைரஸ்.
* ஒரு மனிதன் 50 ஆண்டு வாழ்நாளில் தூங்கி கழிக்கும் நாட்கள் 6 ஆயிரம்.
* கங்காரு 13 மீட்டர் தூரம் தாண்டும் சக்தி படைத்தது. * இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
* அதிக அளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் இந்திய மாநிலம் - கர்நாடகா.
* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு இஸ்ரேல்.
உங்களுக்காக சில ஆச்சரியங்கள்(பகுதி-3)..
கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.
சீனாவின் நெடுஞ்சுவர் கி.மு. 214-ல் கட்டி முடிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய விரிகுடா வங்காள விரிகுடா. இதன் நீளம், 2250 மைல்.
இமயமலைத் தொடரின் நீளம் 2313 கிலோமீட்டர். * நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி அகோ மீட்டர்.
* இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளைத் தாக்க லட்சக்கணக்கான வவ்வால்களைப் பயன்படுத்திய நாடு அமெரிக்கா.
* ஆசியாவின் வைரம் என்ற அழைக்கப்படும் நாடு இலங்கை.
* மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை பென்குயின்.
* அட்லாண்டிக் கடலை முதன் முதலில் விமானம் மூலம் கடந்து சாதனை புரிந்தவர் கேப்டன் லின்ட்பெர்க் (1927).
உங்களுக்காக சில ஆச்சரியங்கள்(பகுதி-2)..
* இந்தியாவில் முதன் முதலாக எஸ்.டி.டி. அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1959.
* உலகிலேயே அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் லெனின்.
* பைசா கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
* மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - 3
* இரண்டு தேசிய கீதங்களை கொண்ட நாடு `ஆஸ்திரேலியா'
*ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை Education.
Subscribe to:
Posts (Atom)