Trust (2010): ஆன்லைன் சாட்டிங் வக்கிர மிருகங்கள்.
Trust (2010) அமெரிக்காவில் இளம் டீன் ஏஜ் பெண்கள் எப்படி ஆன்லைன் பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட எதார்த்தத்தை
மீறாமல் சொல்லும் படம். ஆன்லைன் சாட்டிங் நம்மில் அனைவரும் செய்து
இருப்போம். முகம் தெரியாத நிறைய நபர்களை நாம் சந்திக்க ஒரு வாய்ப்பாய்
அமைக்கிறது ஆன்லைன் சாட்டிங். முகம் தெரியாமல்/முகத்தை மூடி செய்ய படும்
வாய்ஸ் சாட்டிங்கில் ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும், வயதான ஆள் தான்
டீன் ஏஜ் பையன் போலவும் நம்முடன் சாட் செய்ய நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
தவறான சாட் முலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுவதை,
பெண்கள் ஏமாற்ற படுவதை நியூஸ் பேப்பரில் படித்து இருப்போம். நமக்கு அது
வெறும் செய்தி தான், ஆனால் அந்த பெண் எந்த மாதிரியான மன உளைச்சலுக்கு
ஆளாக்க படுகிறாள், அவளது குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன
என்பதை, கண்டிப்பாய் முன்றாவது நபர்கள் ஆகிய நாம் உணர முடியாது. ஆன்லைன்
சாட்டின் விளைவாக ஒரு அமெரிக்க டீன் ஏஜ் பெண் எப்படி பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டு உடைந்து போகிறாள், எப்படி பட்ட மன
உளைச்சலுக்கு ஆளாகிறாள், அந்த மன உளைச்சலில் இருந்தது எப்படி மீள்கிறாள்
என்பதை அற்புதமாய் சொல்லும் படம் தான் Trust.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான அனே (Annie) 14 வயதை நெருங்கும்
அமெரிக்க டீன் ஏஜ் பெண். முதல் காட்சியில் அனே நெட்டில் சிலருடன் தனது
ஸ்கூல் வாலிபால் செலக்ஷன் பற்றி ஆன்லைன் குரூப் சாட் செய்வது போன்று படம்
ஆரம்பிக்கும், அந்த சாட்டில் தன்னுடன் தவறாக பேசும் நபரை அனே உடனே பிளாக்
செய்து விடுவாள். இதில் இருந்தது தவறாக பேசுபவர்களை கண்டு பிடிக்கும்
அளவுக்கு வளர்ந்த பெண் அனே என்பது நமக்கு புரியும். அந்த குரூப் சாட்டில்
சார்லி என்பவன் மட்டும் மிகவும் நல்லவன் போல் அனேவிற்கு வாலிபால்
விளையாட்டு பற்றி டிப்ஸ் தருவான். அனேவும் ஸ்கூல் வாலிபால் டீமில் விளையாட
செலக்ட் ஆகி விடுவாள். மறுநாள் சாட்டில் சார்லி அவளது செலக்ஷன் பற்றி
கேட்க, அனேவிற்கு சார்லி மீது நல்ல அபிப்பிராயம் வருகிறது. இருவரும்
சாட்டில் பேச ஆரம்பிக்கிறர்கள். சார்லி தனக்கு 15 வயது தான் ஆகிறது, தானும்
ஸ்கூல் வாலிபால் பிளேயர் என்று சொல்லுவான். இப்படியாக சார்லி மற்றும்
அனேவின் நட்பு சிறு புள்ளியில் ஆரம்பித்து வளர்கிறது.
இதற்கிடையே அனேவின் தந்தை வில் (Will) அவளது 14 ஆவது பிறந்த நாள்
அன்று Apple Mac புக் ஒன்றை பரிசாக தருவார். Mac புக் முலம் அனே
சார்லியுடனான தனது சாட்டிங்கை தொடர்கிறாள். அப்பொழுது சார்லி தான் 15 வயது
பையன் இல்லை, தனக்கு 20 வயது ஆகிறது என்று சொல்லுவான். அனேவும் அதை பெரிய
விஷயமாக எடுத்து கொள்ள மாட்டாள். சிறிது நாட்களில் இருவரும் டீப்
சாட்டிங்கில் இறங்கி விடுவார்கள். பிறகு சார்லி தனக்கு 20 வயது இல்லை, தான்
25 வயது வாலிபன் என்று ஒரு புகைபடத்தை அனுப்புவான். அனே அப்பொழுதும் அவனை
மன்னித்து விடுவாள்.
Trust: What Ever happens Life has to Go On.
இருவரது சாட்டிங் எந்த தடையும் இன்றி வளர்கிறது. ஒரு நாள் சார்லி நாம்
இருவரும் சந்தித்தால் என்ன என்று சொல்லி, அந்த சந்திப்புக்கு அனேவிடம்
சம்மதம் வாங்கி விடுவான். அந்த ஊரில் இருக்கும் ஒரு மாலில் இருவரும்
சந்திப்பது என்று முடிவு செய்கிறார்கள். அந்த மால்க்கு சென்று சார்லியை
பார்த்த பிறகு தான் அனேவிற்கு தெரிய வரும், சார்லி 25 வயது வாலிபன்
கிடையாது, 35 வயதை கடந்த நடுத்தர ஆள் என்பது. மால்லில் இருந்தது வெளியேற
அனே செய்யும் முயற்சி, சார்லியின் நயவஞ்சக பேச்சால் தடுத்து நிறுத்த
படுகிறது. மால்லில் இருந்தது அனேவை சார்லி ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து
சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான்.
அந்த சம்பவத்தினால் மனம் சோர்வடையும் அனே, அதை பற்றி தனது உயிர் தோழியான
பிரிட்டானியிடம் சொல்கிறாள். ஆனால் பிரிட்டானி அந்த சம்பவத்தை அவர்கள்
படிக்கும் ஸ்கூல் நிர்வாகத்திடம் சொல்லி விடுவாள். அங்கிருந்து லோக்கல்
போலீஸ், பிறகு FBI வரை விஷயம் சென்று விடும். அனே ஒரு வயதான நபரால் ஏமாற்றி
கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டு வில் (Will) உடைந்து
விடுவார். FBI விசாரணையில் சார்லி இது போல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது
தெரிய வரும். அதுவும் எந்த ஒரு தடயமும் விடாமல் தவறை சரியாக செய்பவன்
சார்லி என்பது தெரியவரும். IP அட்ரெஸ், கிரெடிட் கார்டு, போட்டோ என்று ஒரு
தடயம் கூட கிடைக்காது.
சாதாரண ஆக்சன் படமாக இருந்தால், பாதிக்க பட்ட பெண்ணின் அப்பா கதாபாத்திரம்
தன் பெண்ணை மோசம் செய்தவனை துரத்தி துரத்தி கொலை செய்வது போல் இருந்தது
இருக்கும். அது நடைமுறை சாத்தியம் இல்லாத செயல். அப்படி செய்து இருந்தால்
பத்தோடு பதினொன்று என்று இந்த படம் ஆகி இருக்கும்.
ஆனால் Trust படத்தில் அந்த மாதிரி எதுவும் செய்யாமல், பாலியல் ரீதியாக
துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவர்களது
குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள் பற்றி காட்டி இருப்பார் இயக்குனர் டேவிட்
சுவிம்மர் (David Schwimmer). தன் அன்பு மகள் யாரோ ஒருவனால் ஏமாற்ற
பட்டு விட்டாளே என்று அனேவின் தந்தை கதாபாத்திரமான வில் கதறும் காட்சிகள்
நம்மை நிறைய இடங்களில் உலுக்கி எடுத்து விடும். படம் நகர நகர நாமும்
அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகி விடுவோம். அந்த குடும்பத்துக்கு
எப்படியாது ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து விடுவார்
இயக்குனர். படத்தின் இறுதி காட்சியில் வில் மற்றும் அனே இடையே நடைபெறும்
உரையாடல்கள் உலக தரமானவை. யாரையும் பழி வாங்காமல், யாருக்கும் அப்படி இரு,
இப்படி இரு என்று அட்வைஸ் செய்யாமல் என்ன நடந்தாலும் Life has to Go On
என்ற தத்துவத்துடன் படம் முடியும்.
படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது சார்லி என்பவன் யார் என்று
காட்டப்படும். அந்த காட்சியை பற்றி ரொம்ப நேரம் நினைத்து கொண்டு இருந்தேன்.
எனக்கு தோன்றியது சார்லி என்பவன் சமுகத்தில் முலையில் யாருக்கும்
தெரியாமல் ஒளிந்து வாழும் மிருகம் கிடையாது, அவன் சமுகத்தின் உயர்ந்த
இடத்தில் கூட இருக்கலாம், எங்கும் இருக்காமல் எதிலும் இருக்காமல்,
யாராகவும் இருக்காமல்...
போன வருடம் இணையத்தில் ஒரு பிரச்சனை வெடித்தது, சாரு நிவேதிதா என்கிற
எழுத்தாளர்/பிளாக்கர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசி விட்டார் என்ற சர்ச்சை
வெடித்தது. அது உண்மையா என்று கூட எனக்கு தெரியாது. அனைவரும் சாரு
நிவேதிதாவை அவர் சாட்டில் பேசியதை விட மிகவும் ஆபாசமாக பேசினார்கள். அந்த
பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே.
எனக்கு இந்த படம் பார்த்த உடன் அந்த பெண்ணின் (அது பெண்ணே கிடையாது என்றும்
சில பேர் சொன்னார்கள்) மன நிலையை யோசித்து பார்த்தேன், ஒரு கனம் என்
உடம்பு நடுங்கி விட்டது. அது தான் Trust டின் தாக்கம்.
வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாய் பாருங்கள். முழு படத்தையும் youtube யில் காண இங்கு கிளிக் செய்யவும்.
Trust: What Ever happens Life has to Go On.
No comments:
Post a Comment