மதீனா
மதீனா
(Medina, அரபு மொழி: المدينة المنورة), சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில்
ஒன்றாகும். மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின்
முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜித் அந்-நபவி மதீனா நகரில் அமைந்துள்ளது. அதற்கு உடனடுத்ததாக
முஹம்மது நபியவர்களின் வீடு அமைந்துள்ளது. இஸ்லாமிய உலகின் நினைவுச்
சின்னங்களான புராதனமான அவ்வீடும் முஹம்மது நபியவர்களின் பிரசங்க மேடையும்
இன்றும் அதே வடிவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. மேலும், மதீனா நகரில்தான் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இது
இஸ்லாமின் இரண்டாவது புனித நகரம் ஆகும். மேற்கு சவுதி அரேபியாவின் ஹெஜாஸ் பிராந்தியத்திலுள்ள மதீனா மாகாணத்தின்
தலைநகராகும். மேலும் இது இஸ்லாமிய தீர்க்கதரிசியான முஹம்மது அவர்கள் அடக்கமான
இடமும் ஆகும். வரலாற்றின்படி இவரது ஹிஜ்ரா போருக்கு பின் இது இவரது சொந்த இடமாக அமைந்துள்ளது.
இஸ்லாத்தின் மறுவருகைக்கு முன்பு இந்த நகரம் யாத்ரிப் என்ற பெயரில் அறியப்பட்டது. பின்னர் இது முஹம்மது
அவர்களால் மதீனா என்று பெயரிடப்பட்டது. மதீனாவில் தான் இஸ்லாமின் மூன்று மிகபழம்பெரும்
மசூதிகளான அல்-மஸ்ஜித்-நபாவி
(தீர்க்க தரிசியின் மசூதி), குபா
மசூதி (இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதி), மற்றும்
மஸ்ஜித் அல்-குய்ப்லாடின் என்கிற மசூதிகள் அமைந்துள்ளன. சவுதி அரேபிய அரசின் மத
கோட்பாடுகளால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பின்னாளில்
வழிபட்டுத்தலங்கலாக மாறின. சவுதியின் கொலோச்சுதல் உயர்ந்த பின்பு மதினாவின்
உண்மையான பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டன. முஹம்மது நபியின் வருகையை
அடிப்படையாக வைத்தே இஸ்லாமிய நாட்காட்டி உருபெற்றது. அதாவது ஹிஜ்ரி நாட்காட்டியின் 622 CE லிருந்தே இதன் தொடக்கம் ஆரம்பிக்கிறது. மக்காவைப்போன்றே மதீனாவிலும் இஸ்லாமியர்கள் மட்டுமே நுழைய
முடியும். இஸ்லாமியர் அல்லாதவர்கள் இங்கு நுழைய அனுமதிக்கபடுவதில்லை.
No comments:
Post a Comment