Wednesday, 24 December 2014

சிகரத்தைப்பற்றி சிறுதுளி....

கே.பி' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், மறைந்துவிட்டார். ஆனால் அசாதாரண சாதனைகளை விட்டுச் சென்றிருக்கிறார் அந்த திரையுலக மேதை. தமிழ் சினிமாவில் யாராலும் அழிக்க முடியாத அபார சாதனைக்குச் சொந்தக்காரர் கேபி. அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். சிறுவயதிலேயே மேடை நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதியும் இருக்கிறார்.

Wednesday, 10 December 2014

குஜராத்தின் கூக்குரல்

 குஜராத் கொடூரத்தின் மறுக்கப்படும் நீதிகள்....
.

குஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்து மதவெறிப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த பிப்ரவரி 27, 2012 அன்று அப்படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு முசுலீம் அமைப்புகளும், ஜனநாயக  மனித உரிமை இயக்கங்களும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.  அதே பத்தாண்டுகளுக்கு முன்பு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையாகி, 59 பேர் இறந்துபோன வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கும்பொழுது,  இந்து மதவெறிப் படுகொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

Monday, 8 December 2014

கயவர்களின் காவிபாஷை

ராமனை ஏற்காதோர் விபச்சாரவிடுதியில் பிறந்த்தவர்களாம்.


 சம்பவம் 1 :
”உங்களுக்கு யார் வேண்டும் என்று முடிவு 
செய்து கொள்ளுங்கள் ? ராமனின் 
புத்திரர்களா ? அல்லது விபச்சார விடுதியில் பிறந்தவர்களா?” என்று முத்தாய்ப்பாகக் கூறி டில்லி மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மோடியின் அமைச்சரவை சகா சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற பெண் சாமியார் தனது உரையை முடித்தார். தனது பேச்சுக்கு ஒரு விளக்கத்தையும் அளித்தார் சாத்வி. அது அவரை இன்னும் தெளிவாக அம்பலப்படுத்தியது. ‘இந்தியாவின் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்
ராமனின் குழந்தைகளே. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உண்மையான
 இந்தியர்கள் இல்லை’ என்பதே தனது உரையின் சேதி என்றார்.

Saturday, 6 December 2014

ராஜாவுக்கு ஓர் கடிதம் - வைரமுத்து

 என் ராஜாவே....


என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

Tuesday, 2 December 2014

மதீனா



 மதீன
மதீனா (Medina, அரபு மொழி: المدينة المنورة), சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின்